31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் உலகம்

2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க்: ’டைம்ஸ்’ தேர்வு

2021-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க்கை, டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், ஆண்டுதோறும் சிறந்த நபரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மின்சார கார் விற்பனையில், டெஸ்லா நிறுவனம் இந்தாண்டு ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது, எலான் மஸ்க் இந்த விருது பெற காரணமாக கருதப்படுகிறது. அதோடு அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளை 2021-ம் ஆண்டின் கதாநாயகர்களாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், சிறந்த விளையாட்டு வீரர் எனவும் டைம்ஸ் தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை டைம்ஸ், சிறந்த நபர்களாக தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

43 சவரன் நகையை குப்பையில் வீசி சென்ற பெண்!

G SaravanaKumar

முதலமைச்சரின் கையைப் பிடித்து சாவி தர சொன்ன பிரதமர்

EZHILARASAN D

காவிரி நீர் பங்கீட்டு விவகாரம்: கர்நாடகா மீது தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு

G SaravanaKumar