கன்னியாகுமரி : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரியில் காட்டு யானை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாரில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரப்பர் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.…

கன்னியாகுமரியில் காட்டு யானை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாரில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரப்பர் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பழங்குடியின மக்கள் ரப்பர் வடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : ஆசிய திரைப்பட விருதுகளை அள்ளி வருமா பொன்னியின் செல்வன்?

கடந்த டிசம்பர் மாதம் இங்கு ரப்பர் பால் வடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஞானவள்ளி என்ற பழங்குடியின பெண், காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.25,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ஞானவள்ளி குடும்பத்தாரிடம் வழங்கினார்.

– வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.