தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.2,47 லட்சம் கோடி கடன் – அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தகவல்…!

மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 16 ஆம் தேதி மாநில நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழ் நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ. 13.18 லட்சம் கோடி என (இவை அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் உள்ளடக்கியது)” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். அதில் மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் பேசியதாவது :

  • மின்சார வாரியம் தொடர்பான இந்த வெள்ளை அறிக்கையில் 2001 முதல் தற்போது வரையிலான வருவாய், செலவினங்கள், கட்டமைப்பு வளர்ச்சி குறித்து காட்டப்படுகிறது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் இருந்தது.
  • மின்சாரவாரியம் எப்படி இந்த 25 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு சென்றது. இதை எப்படி மீட்டெடுக்க உள்ளோம் என்பதை காட்டுவதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை.
  • மின்சாரத்துறை கடந்த 25 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. புதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, திட்டங்கள் இல்லை.
  • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. கூடுதல் வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் செலவினம் அதிகம் வந்துள்ளது. ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இது ஏன் என்று கேள்வி கேட்கிறோம்.
  • தமிழ் நாடு மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் 74,714 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 65,921 பேர் பற்றாக்குறையா ஏற்பட்டுள்ளது.
  • மின்சாரத்துறையில் 15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த, அரை மணி நேரத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது விரைவில் நிறைவேற்றப்படும்.
  • மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.
  • கடந்த திமுக ஆட்சியில் 99,573 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டன. தற்போது மொத்தம் 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.
  • 25 ஆண்டுகளாக பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1.50 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க திட்டமிட்டள்ளோம்.
  • தமிழக மின் வாரியத்தில் விரைவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு துவங்கப்படும்.
  • மின்சாரத் துறையில் முறைகேடு செய்யவே ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பதவி உயர்வு வழங்காமல் பல பணியாளர்களை ஏமாற்றி உள்ளனர்.
  • தற்போது பணி நியமனத்தில் எவ்வித ஊழலும் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.