முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தின் எதிர்காலத்தை மீட்கும் தேர்தல் நடைபெறவுள்ளது: மு.க.ஸ்டாலின்

மத்திய அரசிடமிருந்து தமிழகத்தின் உரிமைகளை தட்டிகேட்டு பெற்றிடும் ஆட்சியாக, திமுக ஆட்சி அமைந்திடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்சசியில் பங்கேற்று பேசிய மாற்றுத்திறனாளி சந்தியாகு கோரிக்கை மனுவை அளித்தார். அதில், தமிழகத்தில் சுமார் 80ஆயிரம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் பயிற்சி முடித்து பணி கிடைக்காமல் உள்ளதாகவும், இவர்களுக்கு பணி வழங்க ஆவண செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தின் எதிர்காலத்தை மீட்கும் தேர்தல் நடைபெறவுள்ளது எனவும், இத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

20 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அமைச்சர் கைது

Halley karthi

ஒரு ஆம்லெட்டுக்கு இரண்டு இலை தரமறுத்த உணவக ஊழியரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்!

Jayapriya

9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Leave a Reply