அரசியலில் வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்து வந்தவர்களுக்குத்தான், தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக, தான் அரசியலுக்கு வரவில்லை எனவும், அரசியலை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதோடு, காந்தியின் கொள்ளு பேரன் நான், காந்தியின் அதே வைராக்கியத்தோடு அரசியலுக்கு வந்துள்ளேன் என்ற அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பலர் காசு கொடுத்து ஓட்டு வாங்கியிருப்பதாகக் கூறினார்.
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேர்மையாக பெற்ற ஒவ்வொரு வாக்கும் விலை மதிப்பற்றது எனவும், தேர்தலின் தோல்வி மக்கள் நீதி மய்யத்தின் வேகத்தை ஒருபோதும் குறைக்காது. அரசியலில் வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்து வந்தவர்களுக்குத்தான், தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது என்று விமர்சித்தார்.
மேலும், கடினமாக இருக்கும் என்று எண்ணி தான் அரசியலுக்கு வந்தாகவும், வெற்றியை நோக்கி மக்கள் நீதி மய்யம் நகர்ந்து கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.