#Colombia -வில் ஹெலிகாப்டர் விபத்து – 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை…

eight soldiers, death, colombia, military helicopter, helicopter crash

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது.இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்கள் யாரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதையும் படியுங்கள் : Chennai -ல் மீண்டும் சோகம் | சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு!

இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டின் குடியரசு தலைவர் கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.முன்னதாக, ஏப்ரல் மாதத்தின் கொலம்பியா நாட்டின் வடக்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.பிப்ரவரி மாதத்தில் பனாமா எல்லை பகுதியில் விமானத் தளத்தில் இறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.