எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் – 11 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய நிலையில் காவல்துறை சார்பில்  11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலையில்  கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய நிலையில் காவல்துறை சார்பில்  11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி  நிகழ்ச்சி நடைபெறும் போது தொண்டர்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை நடத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு மின்சாரவாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.  நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, ஏதேனும் அவசர ஊர்தி வரும் பட்சத்தில் தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்க்கு வழி விட வேண்டும் உள்ளிட்ட 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் மீறாமல் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சியை நடத்தவும், அவசர சேவை வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தினாலோ தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்தின் போது திட்டமிட்டு ஆம்புலன்ஸ் அனுப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.