எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் ஒரே குணாதிசயம் கொண்டவர்கள் என அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளர்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், அவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களாவது:
எடப்பாடி பழனிச்சாமிக்கு சலைத்தவரல்ல மு.க.ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்றால் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு மாற்றாக, வரும் காலங்களில் அ.ம.மு.க திகழும்.
அதிமுக எழுச்சி மாநாட்டால் மக்களுக்கும் பயனில்லை, அதிமுகவினருக்கும் பயனில்லை.பா.ஜ.க ஊழல் செய்தார்களா? என்பதை வரும் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.







