அதிமுகவின் மாநாடு முடியட்டும் பார்க்கலாம்!” சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி!

மதுரையில் நடக்கும் அதிமுகவின் மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மாநாடு முடியட்டும் பார்க்கலாம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு இன்று…

மதுரையில் நடக்கும் அதிமுகவின் மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மாநாடு முடியட்டும் பார்க்கலாம் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. அதிமுக 50 ஆண்டுகளை நிறைவு செய்து 51ஆவது ஆண்டில் பயணிக்கும் வேளையில் மாநாடு நடத்தப்படுகிறது. மேலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் மாநாடு ஆகும்.

இதே போன்று  நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக ஆளுநரை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை, அமைச்சர் துரைமுருகன் இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் திருச்சியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் மதுரையில் நடக்கும் அதிமுகவின் மாநாடு குறித்து கேட்டதற்கு முடியட்டும் பார்க்கலாம் என கூறினார்.

அதே போன்று உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு இப்போதைக்கு நீட் தேவையில்லை என தெரிவித்தார்.

இப்படி அடுத்தடுத்த கேள்விகளுக்கு ஒற்றைவரியில் பதில் அளித்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.