எடப்பாடி வனப்பகுதியில் காட்டுத் தீ! – போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகேயுள்ள வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.  சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து சங்ககிரி செல்லும் வழியில் கோணமேரி…

எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகேயுள்ள வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். 


சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து சங்ககிரி செல்லும் வழியில் கோணமேரி
பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியைச் சுற்றிலும் வனக்காடாக இருந்து வருகின்ற நிலையில் மாதேஸ்வரன்
கோயில் பின்புறம் சிலர் பீடி, சிகரெட், மது அருந்திக்காெண்டு சமூக விரோத
செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று இரவு மாதேஸ்வரன் கோவில் பின்புறம் காய்ந்த செடிகளில் மர்ம நபர்கள் தீயிட்டு சென்றதாகவும், இதனால் மாதேஸ்வரன் கோவில் முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை வனப்பகுதியில் காட்டுத் தீ பரவிக் கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த எடப்பாடி தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ
இடத்திற்கு விரைந்து சென்று காட்டுத் தீயை அணைத்தனர். 

—–ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.