இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
2006- 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வருமானம் உபரியாக இருந்தது எனக் கூறிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திட்டமிடப்படாத செலவுகளால் வருவாய் பற்றாக்குறை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
அதிமுக அரசு தெரிவித்த கடன் விவரம் சரியாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15ஆம் ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், அதன்பின் பல மடங்கு அதிகரித்ததாகத் தெரிவித்தார். வருவாய் பற்றாக்குறையே இந்தளவுக்கு இருக்கும்போது நிதி பற்றாக்குறை கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும் எனவும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.







