முக்கியச் செய்திகள் இந்தியா

கிழக்கு லடாக் பிரச்னை; விரைவில் 14வது சுற்று பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் பகுதியில் ஜன.12ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு பதிவான நிலையிலும் அது குறித்த விவரங்களை சீனா பகிரவில்லை.

இதனையடுத்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் அதிக எண்ணிக்கையில் வீரர்களை நிறுத்தியது. மட்டுமல்லாது ராணுவ தளவாடங்களையும் அமைக்கத் தொடங்கியது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், இந்த பதற்றத்தை குறைக்க இருநாட்டு ராணுவமும் ராஜ தந்திர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதுவரை 13 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடைசி பேச்சுவார்த்தை அக்.10ம் தேதி நடைபெற்றது. ஆனாலும் இந்த பதற்றம் குறைந்தபாடில்லை. இப்படியான நிலையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா புதிய கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ராணுவ ஒப்பந்தத்தின்படி இப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியின்போது ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் 14வது சுற்று பேச்சுவார்த்தை ஜன.12ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement:
SHARE

Related posts

தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!

9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Halley Karthik

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Arivazhagan CM