டெல்லியில் அதிகாலையில் 4.0 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

டெல்லியில் அதிகாலையில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Earthquake measuring 4.0 on the Richter scale felt in Delhi early this morning - people fled their homes!

டெல்லி என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் இன்று (பிப். 17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. புது டெல்லியில் பூமியின் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

கடந்த ஜனவரி 23 அன்று, சீனாவின் ஜின்ஜியாங்கில் 80 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி-என்சிஆர் முழுவதும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. அதன்பின் மீண்டும் 3 வாரங்களில் இப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.