மஹாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை காலை 6.24 மணியளவில் மஹாராஷ்டிர மாநிலம், கொல்ஹாபூரில் கிழக்கு மேற்குப் பகுதியில் இருந்து 154 கி.மீ தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
-ம.பவித்ரா







