சீனாவில் நிலநடுக்கம் – லடாக் மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, லடாக் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில், லடாக் எல்லைக்கு மிக அருகில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. லடாக்கின் லே நகரிலிருந்து சுமார் 167 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய எல்லைப்பகுதிகளிலும் எதிரொலித்தது.

லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள், அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ​இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.