ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில்  நகங்கர் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. தொடர்ந்து அதே மாகாணத்தில்  4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தால் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில்  ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.