ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில்…

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகவும்,  இருப்பினும் பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முன்னதாக கடந்த 17-ம் தேதி ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/NCS_Earthquake/status/1769888115068702781

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.