பேசிக்கொண்டிருந்தபோது இயர்போன் திடீரென வெடித்துச் சிதறியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள உதய்புரியா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் நாகர். இவர் புளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு நண்பருடன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். போன் சார்ஜில் இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக இயர்போன் திடீரென வெடித்ததில், சேரில் அமர்ந்திருந்தத நாகர், தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தார். சிறிது நேரத்திலேயே மயங்கிவிட்டார். இதை யடுத்து வீட்டில் இருந்தவர்கள், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் தெரிவித் தனர்.
இயர்போன் வெடித்துச் சிதறியதில் நாகரின் காதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள் ளது. வெடித்த அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு நாகர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இயர்போன் வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








