தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 12,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் கொரோனாவல் பதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட நிலையில், அவருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெரிய அளவில் உடல்நிலையில் பாதிப்பு இல்லாவிட்டாலும், இதய சிகிச்சை மேற்கொண்டவர் என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.







