பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற மலிவு விலை மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு மருந்தகத்தை திறந்துவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என சுகாதாரத் துறை தெரிவிக்கவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கும் போது கொடுத்து உதவலாம் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.
எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என தமிழை அழித்த கும்பல் இன்று தமிழைப்பற்றி பேசிகிறது என்ற அவர், “நடிப்பில் மட்டுமே கமல் விஷயம் பெரியதாய் தெரியும், மற்றபடி பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள். கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எதைக் கண்டாலும் பயப்படுகிறார் இவர் உலக நாயகனா” என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் முட்டாள் என தெரியும், அதைப் போல பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமலும் முட்டாள்தான். இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிக்கலாமா, திறக்கலாமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். ஆனால், ஆயிரம் டன் ஆக்ஸிஜன் கொள்ளளவு உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை தற்போது அத்தியாவசிய தேவை இருக்கும் போது அதை திறக்க எந்த ஆட்சேபனையும் செய்ய வேண்டாம்” என பேசினார்.