முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை…

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமாக சென்னை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில்  உள்ள 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சாந்தோம், அண்ணா நகர், சூளைமேடு, கொளத்தூர் ஆகிய நான்கு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள், அங்கு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கே.சி.வீரமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர்  2011 ஆம் ஆண்டு வெறும் 7.48 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 76.65 கோடி ரூபாயை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

654%வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், 28,78,13,758 ரூபாயை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளார் எனவும் முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.