உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில்
தசரா திருவிழாவில் 2-ம் நாளான நேற்று வீதி உலா கோளாகலாக நடைபெற்றது.
உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி
மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத
முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசா திருவிழா
நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள்
வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்மாள் பல்வேறு அவதார கோலத்தில் எழுந்திருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
திருவிழாவின் 2-ம் நாளான இன்று அம்பாளுக்கு பால், மஞ்சள், சந்தணம்,
குங்குமம், மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம்
நடைபெற்று அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமன பக்தர்கள்
கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அம்பாள் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் கற்பக விருட்சம் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 24-ஆம் தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.







