முக்கியச் செய்திகள் தமிழகம்

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று: உடல் நிலை சீராக உள்ளது- மருத்துவர்கள் அறிக்கை

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,68,912 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 904 பேர் மரணடைந்துள்ளனர். தேர்தல் பரப்புரையை தொடர்ந்து கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக எம்பி கனிமொழிக்கு தொற்று ஏற்பட்டு, தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றால் மரணடைந்தார். மேலும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு நேற்றைய தினம் கொரோனா ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் நிலை தொடர்பாக மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ’கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையை தீவிரமாக கண்கானித்து வருகின்றனர்’

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு!

Niruban Chakkaaravarthi

அடுத்த ஆனந்த் யார்? கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் தேடல்!

Jayapriya

ஸ்பெயினை தாக்கிய கடும் பனிப்புயலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

Saravana