துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ள இப்படத்திற்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதுவரை சாஃப்ட்டான கேரக்டரில், ரொமான்ஸ் ஹீரோவாக பார்த்து ரசித்த துல்கர் சல்மான், முதன் முறையாக முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஏற்கனவே ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான’ கலாட்டாக்காரன்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. 1980களில் நடைபெறும் பீரியட் படமாக உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில், ராஜு என்கிற ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதை களமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரில் மலையாள சினிமாவுக்கே உரித்தான சில குறியீடுகள் இடம் பெற்றுள்ளதோடு, துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Waited long enough to show you all this film and now it's almost time. See you all in cinemas this Onam 2023 but before that..
Here is the #KOKTrailer – https://t.co/PEvJDs4Cqu#KingOfKotha @AishuL_ @actorshabeer @Prasanna_actor #AbhilashJoshiy @NimishRavi @JxBe @shaanrahman… pic.twitter.com/6RAe0ipgm4
— Dulquer Salmaan (@dulQuer) August 10, 2023
- பி.ஜேம்ஸ் லிசா








