சென்னையில் மாடு முட்டி படுகாயம் அடைந்த சிறுமி நலமுடன் உள்ளார்! நியூஸ் 7 தமிழுக்கு மருத்துவர் பிரத்யேக பேட்டி!

சென்னையில் மாடு முட்டி படுகாயம் அடைந்த சிறுமி ஆயிஷா நலமுடன் உள்ளார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சக்கரவர்த்தி  நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.  சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு.…

சென்னையில் மாடு முட்டி படுகாயம் அடைந்த சிறுமி ஆயிஷா நலமுடன் உள்ளார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சக்கரவர்த்தி  நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். 

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9)
எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது
அவ்வழியாக 7 மாடுகள் சென்ற நிலையில், அதில் ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் கொம்பால் தாக்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை தொடர்ந்து தாக்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள்  பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி உள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த சிறுமி ஆயிஷாவை அவரது தாய் மீட்டு சிகிச்சைக்காக
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மாட்டின் உரிமையாளர் விவேக்(26) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சக்கரவர்த்தி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

குழந்தையை மாலை 5:30 மணி அளவில் பெற்றோர் அழைத்து வந்தனர். தலையில் கீரல் ஏற்பட்டு ரத்தம் வந்துக் கொண்டிருந்தது, அதற்கு சிகிச்சை அளித்து தையல் போடப்பட்டது. நெஞ்சு மற்றும் கை பகுதியிலும் காயம் ஏற்பட்டு இருந்தது, தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என்று டி டி ஊசி போடப்பட்டது. ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது, அதிர்ஷ்டவசமாக உடலுக்கு உள் எந்த வித பெரிய பாதிப்பும் இல்லை, வெளி காயங்கள் தான். மாடு முட்டி பாதிப்படைந்த குழந்தை ஆயிஷா உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தொடர்ந்து 10 முதல் 5 நாட்கள் மருத்துவர்களை சந்தித்து  கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாட்களில் காயங்கள் சரி ஆக வாய்ப்புள்ளது. குழந்தை பள்ளிக்கும் செல்லலாம். குழந்தை சற்று பயந்து உள்ளார். உளவியல் மருத்துவரும் குழந்தையிடம் பேச உள்ளார். புதிதாக யாராவது வந்தால் சற்று பயப்படுகிறார். சாதரணமாக பெற்றோருடன் பேசுகிறார், உணவு எடுத்துக் கொள்கிறார், சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்.

இவ்வாறு தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சக்கரவர்த்தி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.