துல்கர் சல்மானின் “சீதா ராமம்” பட அப்டேட்

முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சீதா ராமம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் ‘ஹே சினாமிகா’ மற்றும் ‘சல்யூட்’ படங்களைத் தொடர்ந்து,  பாலிவுட் இயக்குநர்…

முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சீதா ராமம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் ‘ஹே சினாமிகா’ மற்றும் ‘சல்யூட்’ படங்களைத் தொடர்ந்து,  பாலிவுட் இயக்குநர் பால்கியின் இயக்கத்தில் ‘Chup: Revenge Of The Artist’ இந்திப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘சீதா ராமம்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான லெப்டினென்டாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா காஷ்மீரைச் சேர்ந்த ஆஃப்ரீன் என்ற முஸ்லிம் பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

https://twitter.com/dulQuer/status/1529384195424137216

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் ‘சீதா ராமம்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.