இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 36 விமானப் படை விமானிகளுடன் அபிலாஷா பாரக்கிற்கு விமானி பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்மி ஏவியேஷன் டிஜி ஏ.கே.சூரி பங்கேற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை 26 வயதான அபிலாஷா பாரக் பெற்றுள்ளார். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அபிலாஷா பாரக், கடந்த 2018 செப்டம்பர் மாதம் விமானப் படையில் சேர்ந்தார். இவர் ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரி கர்னல் எஸ்.ஓம் சிங்கின் மகள் ஆவார்.








