முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தால் தான் சுங்கச்சாவடி கட்டணம் குறைத்துள்ளது -எ.வ.வேலு

சுங்கச்சாவடி கட்டணத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததால் தான் 40 சதவீதத்தைக் குறைத்துள்ளார்கள் என எ.வ.வேலு கூறியுள்ளார். 

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தும் வகையில் புதியதாக பொதுப்பணித்துறை சார்பில் 69 புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை 264.83 கோடியில் கட்ட உள்ளோம் என கூறினார்.

மேலும், விதிமீறிய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து. அதே சமயம் சுங்கச்சாவடி கட்டணத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததால் தான் 40 சதவீதத்தைக் குறைத்துள்ளார்கள் என கூறினார்.மேலும் 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என வரைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிதின் கட்காரி கூறியுள்ளார்.

வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் நீடித்துவரும் நிலையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என கேட்டதற்கு, வேலூர் சுற்றுச்சாலை (புறவழிச்சாலை) அமைக்க நிலம் இன்னும் எடுக்கவில்லை. விரைவில் பணிகள் தொடங்கும். நில எடுப்பைத் தாமதப்படுத்துவதால் அரசுக்கு பணிச்சுமை மற்றும் நிதிச்சுமை ஏற்படுகிறது. ஆகவே DRO க்கல் இதனைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை அளித்து நில எடுப்பு பணியை விரைந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூத்துக்குடி விமானநிலையத்தில் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

Jeba Arul Robinson

அந்த அதிரடியை வெளியிட்ட யுவி: ரசிகர்கள் குஷி

Halley Karthik

மலேசியாவின் 10வது பிரதமராக பதவி ஏற்றார் அன்வர் இப்ராஹிம்; புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால்கள்!

Jayakarthi