காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் லில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து, தொடர்ந்து நான்கு நாட்களாக அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
கர்நாடக மாநிலம் காவிரி கரையோர பகுதிகளில், காடுகளில் பெய்த மழை காரணமாகவும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் ஒகேனக்கலில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.








