தமிழக அரசுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ரூ.19,053 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியான வழங்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர்,15வது நிதிக்குழுவின் பரிந்துரையின் கீழ் 2022 – 23 ஆம் ஆண்டுக்கு சுகாதாரம் உள்ளாட்சி மேம்பாடுகளுக்காக வழங்கப்பட வேண்டிய 1,360 கோடி ரூபாய் நிதியும், ஜி.எஸ்.டி. இழப்பீடு ஆக வழங்கப்பட வேண்டிய 10,879 கோடி ரூபாயும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதால் தமிழக அரசின் பல வேறு திட்டங்களின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக வில்சன் குற்றச்சாட்டினார்.