முக்கியச் செய்திகள் இந்தியா

அதிகரிக்கும் போதைப் பொருள் பயன்பாடு – ஆபத்தில் இளைஞர்கள்

இந்தியாவில் போதைப் பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் போதைப் பொருட்களின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும் புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தாவரங்களிலிருந்து தயாராகும் கஞ்சா, கோகெயின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு மட்டுமல்லாமல், டிராமடோல் உள்ளிட்ட போதை மருந்துகளின் பயன்பாடும் இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருட்கள்:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையின்படி, இந்தியாவில் கஞ்சா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.1 கோடி. இதில், முதலிடத்தில் இருக்கும் மாநிலம் உத்தரபிரதேசம். இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப், சிக்கிம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.

போதை மருந்துகள்:

இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த 2018ல் 2.30 கோடியாக இருந்தது என்று கூறும் மத்திய அரசு, அது தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சட்டவிரோத கஞ்சா பயன்பாடு உலக சராசரியை விட இந்தியாவில் குறைவாக உள்ளபோதிலும், போதை மருந்துகள் பயன்பாடு சர்வதேச சராசரியைவிட 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது கிட்டத்தட்ட 77 லட்சம் பேர் அதற்கு அடிமையாகி உள்ளனர்.

எய்ம்ஸ் அறிக்கையின்படி, மிசோரமில் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய ஏழு சதவீதம் பேர் போதை மருந்துகளை உட்கொள்கிறார்கள். நாகாலாந்து 6.5 சதவீதமாகவும், அருணாச்சலப் பிரதேசம் 5.7 சதவீதமாகவும், சிக்கிம் 5.1 சதவீதமாகவும் உள்ளதாக எய்ம்ஸ் அறிக்கை கூறுகிறது..

அதிகரிக்கும் உயிரிழப்புகள்:

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.51.32 லட்சம் கோடி என்கிறது ஓர் ஆய்வு. உலகம் போதைமயமாகி வருவதையே இது காட்டுகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். Global Burden of Disease Study-ன் படி சட்ட விரோத போதைப் பொருட்களின் பயன்பாடு காரணமாக கடந்த 2017ல் மட்டும் உலகளவில் கிட்டத்தட்ட 7.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்

Web Editor

இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்

G SaravanaKumar

நியூஸ் 7 தமிழின் ‘எக்ஸ்பிரஸ் செயலி’

Halley Karthik