சீஸில் கடத்தப்பட்ட போதைப்பொருள் – வீடியோ வைரல்! 

சீஸில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இங்கிலாந்து போலீசார் கௌடா சீஸில் மறைத்து கடத்தப்பட்ட கொகயின் எனும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.  அவர்கள் இது தொடர்பான வீடியோவை யூ டியூபில்…

சீஸில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இங்கிலாந்து போலீசார் கௌடா சீஸில் மறைத்து கடத்தப்பட்ட கொகயின் எனும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.  அவர்கள் இது தொடர்பான வீடியோவை யூ டியூபில் பகிர்ந்துள்ளனர்.  அந்த வீடியோவில்,  போலீசார் இருவர் சீஸ் இருக்கும் பெட்டியை சோதனை செய்வதும்,  அதில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.

இந்த சோதனையில்,  21 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.175 கோடி) மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இந்த சோதனை கடந்த ஆண்டு மே 3ம் தேதி நடந்தது.  இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 46 வயதான சலீம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.  அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில்,  ஏப்ரல் 12 அன்று அவர் பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும் போலீசார் நடத்திய விசாரணையில்,  ​​இச்சமவத்தில் ஈடுபட்ட 28 வயதான ரீதுல் மொஹாபத் என்பவரை கைது செய்தனர்.  அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.