போதைப்பொருட்கள் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் தேதியைப் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போதையின் தீமைகள் குறித்த காணொளி திரையிடப்படவுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது அரசியல் பிரச்சனை அல்ல, நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சனை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கள் தொகுதிகளில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போதைக்கு எதிராக வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்த நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
போதைப் பொருட்களை ஒழிப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது!
ஆகஸ்ட் 10-இல் மாவட்ட ஆட்சியர்கள் – மாவட்டக் கண்காணிப்பாளர்களின் சிறப்புக் கூட்டமும், 11-இல் பள்ளி – கல்லுரிகளில் விழுப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன!
போதை ஒழியட்டும்! பாதை ஒளிரட்டும்! (1/2) pic.twitter.com/AciP7A1ALn
— M.K.Stalin (@mkstalin) August 5, 2022
அண்மைச் செய்தி: ‘குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது’
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுள்ளனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.