புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு?

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் புற்றுநோய் மையம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் புற்று நோய் மையத்தின் மருத்துவ நிபுணர் லூயிஸ் டையஸ் இதனைத் தெரிவித்துள்ளார். குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் புற்றுநோய் மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் புற்று நோய் மையத்தின் மருத்துவ நிபுணர் லூயிஸ் டையஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு, தங்கள் மருத்துவ மையத்தில் சுமார் 6 மாதங்களுக்கு, புற்றுநோயை குணப்படுத்தும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட Dostarlimab என்ற மருந்து அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவருமே புற்றுநோயில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் மருத்துவ நிபுணர் லூயிஸ் டையஸ் தெரிவித்துள்ளார்.

இது மிகப் பெரிய ஆச்சரியம் என தெரிவித்துள்ள நியூயார்க் புற்றுநோய் மையம், அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு சோதிக்கப்படும் என்றும், அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.