ஓட்டுநர் உரிமங்கள் இன்று முதல் விரைவு அஞ்சலில் அனுப்பப்படும் – தமிழ்நாடு அரசு!

ஓட்டுநர் உரிமங்கள், பதிவு சான்றிதழ் விரைவு அஞ்சல் மூலமே இனி அனுப்பி வைக்கப்படும், நேரடியாக வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்படும் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமத்தை…

ஓட்டுநர் உரிமங்கள், பதிவு சான்றிதழ் விரைவு அஞ்சல் மூலமே இனி அனுப்பி வைக்கப்படும், நேரடியாக வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்படும் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமத்தை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் பதிவு சான்றுகள், ஓட்டுநர் உரிமங்கள் விரைவு அஞ்சல் மூலமே அனுப்பி வைக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது. 91 ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் அளிக்கப்படும் ஓட்டுநர் உரிமம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். வாகன், சாரதி செயலியில் செல்போன் எண், முகவரி தவறாக குறிப்பிட்டு இருந்தால் விரைவு அஞ்சலில் அனுப்பப்படாது.

புதிய நடைமுறையால் ஆர்டிஓ பகுதி அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வருவது குறையும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.