திண்பண்டத்திற்காக ரயில் ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு அதை வாங்கி கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உணவு மேல் உள்ள ஆசையினால் பலர் விநோத செயல்களில் ஈடுபடுவதை நம் அன்றாட வாழ்கையில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். உணவு பிரியர்கள் சிலரின் இந்த செயல் பலருக்கு முகம் சுளிக்கும்படி இருந்தாலும் அவர்களின் பழக்கம் மாறவில்லை. அப்படி ஒரு சம்பவம்தான் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் அரங்கேறியுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, 5 அரசு ஊழியர்களின் இடைநீக்கத்திற்கு காரணமாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அல்வாரில் ரயில் ஓட்டுநர் ஒருவர் தினமும் காலை 8.00 மணியளவில் ஓடும் ரயிலை நிறுத்துகிறார். அந்த ரயிலை நோக்கி இன்னொரு நபர் ஓடி வருகிறார். அந்த ஓடிவரும் நபரின் கையில் ஒரு பாக்கெட் இருக்கிறது. அந்த பாக்கெட்டை வாங்கிய பின் ரயில் ஓட்டுநர் மீண்டும் வந்து ரயிலை இயக்கத் தொடங்குகிறார். இந்த சம்பவம் தினமும் நடந்து வந்துள்ளது.
அந்த பாக்கெட்டில் அல்வாரில் பிரபலமாக இருக்கும் ‘கச்சோரி’ எனப்படும் திண்பண்டம் இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களின் இச்செயல் அவ்வழியே செல்லும் பல மக்களுக்கு இடையூறாக இருந்து வந்திருக்கிறது. இது தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருந்ததால் பாதிக்கப்பட்ட ஒருவர், அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
வீடியோ வைரலாகி, அதிகரிகளின் பார்வைக்கு சென்றதால், அந்த ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த கேட்மேன் உட்பட 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளனர் அதிகாரிகள்.