“திராவிடத்தை கருத்தியல் அடையாளமாகப் பார்க்க வேண்டும்”

திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாகப் பார்க்க வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கவிஞர் கு.தென்னவன் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு…

திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாகப் பார்க்க வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கவிஞர் கு.தென்னவன் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் நூல்களை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நூலை வெளியிட வாய்ப்பு அளித்த கவிஞர் தென்னவனுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணா, கருணாநிதி, நாவலர் உள்ளிட்டவர்களுக்கு கருத்தியல் பெட்டகமாக இருந்தவர் பெரியார் எனக் குறிப்பிட்டார்.

பெரியார் கருத்துக்கள் அரசியல் பண்பாடு, திரைத்துறை தளங்களில் பலரால் எடுத்துச் செல்லப்பட்டது போல அம்பேத்கர் கருத்துக்கள் எடுத்துச் செல்லப்படவில்லை எனக் கூறிய அவர், அம்பேத்கருக்கு இணையான தலைவர் இரட்டைமலை சீனிவாசன் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘”எப்போதும்போல உங்களுடைய ஆதரவு வேண்டும்” – நடிகை நயன்தாரா’

அம்பேத்கரையே தலைவராக ஏற்றுக்கொண்டவர் இரட்டைமலை சீனிவாசன் எனவும், ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு முன்னர் பறையர் என்றே அனைத்து தீண்டத்தகாத மக்களும் கருதப்படுவார்கள். அனைவருக்குமாக குரல் கொடுக்க நினைத்தவர் தான் இரட்டைமலை சீனிவாசன் எனக் கூறிய அவர், திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாகப் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.