சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ.54,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ. 53,600க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ரூ.54,240க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ. 6700க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 6780க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 97க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து இன்று ரூ. 98.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500-க்கும் விற்பனையாகிறது.