முக்கியச் செய்திகள் சினிமா

சினிமாவை பணம் கொட்டும் தொழிலாகப் பார்க்க வேண்டாம் -நடிகை ரகுல் ப்ரீத் சிங்

ஒரு நாளைக்கு 14 முதல் 15 மணி வரை உழைக்கிறோம், அந்த உழைப்பு பற்றி ரசிகர்களுக்குத் தெரிய வேண்டும் என  ரகுல் ப்ரீத் சிங் உருக்கமாகத் தெரிவித்தார்.
இந்தியத் திரைப்பட நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் பெரிதாகப் பட வாய்ப்பு கிடைக்காததால், தற்போது ஹிந்தியில் டாக்டர் ஜி, thank god  படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடம் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில், சினிமாவில் கலைஞர்களும், டெக்னீசியர்களும் 15 மணி நேரம் உழைக்கிறோம். அதனை ரசிகர்கள் மதிக்க வேண்டும் என  நடிகை ரகுல் ப்ரீத்சிங் கூறினார். ஒரே நேரத்தில் பல மொழிகளில் நடிக்கிறேன். படப்பிடிப்புக்காக அடிக்கடிபல மாநிலங்களுக்குச் செல்கிறேன்.பயணம் எனது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
எந்த ஊருக்கு படப்பிடிப்புக்குச் சென்றாலும், மற்ற நடிகர் நடிகைகளின் வேலையையும், டெக்னீசியர்களின் வேலையையும் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். என் திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல அனைத்து திரைப்படங்களையும் வைத்துத் தான் சொல்லுகிறேன், என்றார். மேலும், ஒரு நாளைக்கு 14 முதல் 15 மணி வரை உழைக்கிறோம். அந்த உழைப்பு பற்றி ரசிகர்களுக்குத் தெரிய வேண்டும் எனக் கூறிய ரகுல் ப்ரீத் சிங் சினிமா துறையைக் கவர்ச்சியான துறை என மட்டும் நினைத்து கொள்ளாதீர்கள் என்றார்.
இதற்கான மற்ற துறைகளில் உழைப்பு இல்லை என்றெல்லாம் கூறவில்லை. எல்லா துறைகளிலும் உழைப்பு இருக்கிறது. அதே போல தான் சினிமாவிலும், சினிமாவை எளிதில் பணம் கொட்டும் தொழிலாகப் பார்க்க வேண்டாம். இது கிளமர் மீடியா கிடையாது. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது என ரகுல் ப்ரீத் சிங் உருக்கமாகக் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கனியாமூர் வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்-தொல்.திருமாவளவன்

Web Editor

மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்

EZHILARASAN D

ஜம்முவில் உயிரிழந்த தேனியை சேர்ந்த ராணுவ வீரர்!

Niruban Chakkaaravarthi