மின்கட்டண உயர்வே திமுக ஆட்சியை கவிழ வைக்கும்-டிடிவி தினகரன் தாக்கு

மின்கட்டண உயர்வே திமுக ஆட்சியை கவிழ வைக்கும் அமமுகவின் பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்தார். திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர்…

மின்கட்டண உயர்வே திமுக ஆட்சியை கவிழ வைக்கும் அமமுகவின் பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

திமுகவை அமைச்சர் செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார். மின் கட்டணம் போதும், மீன்டும் திமுக ஆட்சி கவிழ. திமுக கூட்டணி கட்சியினர் மவுனம் காக்கின்றனர். விரைவில் ஒட்டுமொத்தமாக தோற்றுவிடுவர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டி முதலமைச்சர் ஸ்டாலினையே பொதுச் செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன், திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மாவிற்கு துரோகம் செய்துள்ளனர்.

விலைபோகாதா சிங்கங்கள் இன்னுன் அதிமுகவில் சிலர் உள்ளனர். கொங்கு மண்டலம் கோட்டை என்றார்கள். இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்னாயிற்று?

எலி வலையானாலும் தனிவலை என்று அமமுக கூட்டம் உண்டு. 1988 ஆம் ஆண்டு என் 26 வயதிலேயே முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்கொண்டேன். இந்த எடப்பாடியெல்லாம் எம்மாந்திரம்.

பாராளுமன்றத் தேர்தலில் அமமுக பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கும்.
அம்மா ஆட்சி மீண்டும் அமையாததற்கு பழனிசாமியே 100% காரணம். அம்மா வழிநடத்திய கட்சியை வட்டார கட்சியாக மாற்றிவிட்டார்.

வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ NO மணியாகிவிட்டன. அதிமுக வென்ற 65 தொகுதி என்பது 65,000 கோடி ருபாய் உழைப்பு. பாராளுமன்ற தேர்தலில் நம் கணக்கை துவக்குவோம் எண அண்ணா பிறந்தநாளில் சபதமேற்போம் என்றார் டிடிவி தினகரன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.