‘அந்த எண்ணம் கூடவே கூடாது’ – மாணவர்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்

தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.…

தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா தொற்றால் தன் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘‘குரங்கம்மை பரவலால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்’

தொடர்ந்து பேசிய அவர், இந்த கல்லூரி தொடங்கும் போது திமுக ஆட்சி இருந்ததாகவும், அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த கல்லூரியைத் தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், குரு நானக் பெயரால் தொடங்கப்பட்டதால், இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் கோட்டையாக அப்போது இருந்த திமுக அரசு வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், அது வீன் போகவில்லை என்பதற்குச் சான்று தான் இந்த விழா எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதி தொடங்கியது எதுவும் சோடை போகாது எனவும், மாணவிகளுக்கு பாலியல், உடல் ரீதியாக இழிச் செயல் நடந்தால் அதைத் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காது எனவும், குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவோம் எனவும் உறுதியளித்தார். மேலும், மாணவர்களுக்கு அந்த எண்ணம் கூடவே கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.