முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

“பயமா இருக்கா, இதுக்கு அப்புறம் இதவுட பயங்கரமா இருக்கும்” – வீரராகவன் எனும் விஜய்

“பயமா இருக்கா, இதுக்கு அப்புறம் இதவுட பயங்கரமா இருக்கும்” என்ற வசனம்தான் இந்த மாதத்திற்கான மீம் டெம்ப்ளேட்!!!

விஜய் நடிப்பில் உருவாகிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியான போதே விஜயின் நடிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ட்ரைலருக்காக போஸ்டர்கள் ஒட்டியும் மாஸ் காட்டி வருகின்றனர். இந்த படத்தின் ஜால்லி ஓ ஜிம்கானா மற்றும் ஹலமத்தி ஹப்பி போ பாடல்கள் முன்னதாக வெளியாகி யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

ட்ரைலர் எப்படி இருக்கிறது?

நீண்ட நாட்களாக கோடி கணக்கான ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ட்ரைலரில், சென்னையில் இருக்கும் பிரபல மால் தீவிரவாதிகளால் ஹைஜேக் செய்யப்படுகிறது. இந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் நடிகர் விஜயும் சிக்கியுள்ளார். உண்மையில் அடுத்த 50 நொடிகளில் நடிகர் விஜயை மாபெரும் உளவாளியாக காட்டும் காட்சிகள் அமைகிறது. ஆயிரத்தில் ஒருவன் இயக்குனர் செல்வராகவனின் எண்ட்ரி இந்த படத்தில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகவும் சாதாரணமாக இருக்கிறது. இருப்பினும், செல்வராகவன் பேசும் வசனமான, “இதவுட பழைய பில்டிங் கெடைக்கலயா, தும்புனா இடிஞ்சி விழுந்துடும் போல” வசனம் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மேலும், படத்தில் ஒரு கெஸ்ட் ரோலாக செல்வராகவன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் முழுவதும் நடிப்பது பிடிக்காதது போல் முகத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கிறார் செல்வராகவன்.

“இப்படி ஒருத்தன் உள்ள இருக்கும் போது, ‘மால்’-ஐ ஹைஜாக் பண்ணா என்ன ஆவும்” என்ற வசனம் வரும்போது நடிகர் விஜய் கோட் சூட் அணிந்து கொண்டு கெத்தாக நடந்துவரும் காட்சிகள் இடம்பெருகின்றன. தொடர்ந்து சில காட்சிகளில் யோகி பாபுவுடன் அமர்ந்துகொண்டு, “பயமா இருக்கா, இதுக்கு அப்புறம் இதவுட பயங்கரமா இருக்கும்” என்ற வசனம்தான் அடுத்த மாதத்திற்கு மீம் டெம்ப்ளேட் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் மீம் கிரியேட்டர்கள் கணித்து வருகின்றனர்.

ட்ரைலரில், ‘மால்’ -ஐ ஹைஜேக் செய்த தீவிரவாதிகளை கையாளும் ஒரு மோசமான உளவாளியாக வரும் நடிகர் விஜயின் பெயர் வீரராகவன். ‘மினிஸ்டர் மெறட்டுரான்னு சொல்லுயா அவன்கிட்ட’ என்று ஒரு மினிஸ்டர் சொல்லும் போது, ‘சார் அவன்ட மினிஸ்டர் மெறட்டுறார்னு சொன்னா, உங்க பொண்டாட்டி, புள்ளைகளெல்லாம் அவனே கொன்னுட்டு தீவிரவாதிங்க பண்ண மாதிரி செட் பண்ணி வச்சிடுவான் சார்’ எனும் செல்வராகவினின் வசனம் விஜய் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டுகிறது. மொத்த ட்ரைலரில், ஒரு ‘மால்’ ஐ ஹைஜேக் செய்யும் தீவிரவாதிகளிடம் போராடி மக்களை காப்பது போன்ற கதையே வெளிப்பட்டுள்ளது. இருந்தாலும் பல இடங்களில் பப்ஜி, ஃப்ரீ ஃபயரில் வரும் துப்பாகிகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும் இருக்கிறது.’

“நீங்க பண்ற அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட்டாகாது, நா ஒன்னும் அரசியல்வாதி இல்ல, போர் வீரன்” என்ற வசனங்கள் விஜய் இதுவரை பேசாத வசனங்களாக அமைந்துள்ளது. மணி ஹைஸ்ட் சீரிஸில் வரும் ப்ரொஃபசர் மற்றும் பெர்லின் கேரக்டரை மிக்ஸ் செய்து வைத்துள்ளது போன்றே பீஸ்டில் விஜயின் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Advertisement:
SHARE

Related posts

கொடைக்கானலில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழா : உடலில் சேற்றை பூசிக்கொண்டு ஆண்கள் நேர்த்திக்கடன்!

Saravana

கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

எல்.ரேணுகாதேவி

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது

Saravana Kumar