முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த தடையை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது .

வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் டெனால்டு ட்ரம்பின் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ட்ரம்புக்கான தடையை அந்நிறுவனம் நீக்கியது. தற்போது பேஸ்புக் மற்றுன் இண்டாகிராம் பக்கங்களுக்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முடக்கப்பட்ட ட்ரம்பின் பக்கங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முறைகேடாக செயல்படும் கணக்குகளை கண்டறிய புதிய பாதுகாப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

டொனால்டு ட்ரம்பை பேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட 34 மில்லியன் நபர்கள் பின்தொடருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 23 மில்லியன் நபர்கள் பின் தொடருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; 3வது நாளாக தொடரும் சோதனை

Jayasheeba

‘பல்வேறு விவகாரங்களில் பொய் பேசும் முதல்வர்’: டிடிவி தினகரன் விமர்சனம்

EZHILARASAN D

தாலிக்கு தங்கம் – முதலமைச்சர் விளக்கம்

Janani