டான் படம் – பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டான் படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் எழுதியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நடிப்பில், வெளியாகியுள்ள டான் திரைப்படம்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டான் படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் எழுதியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நடிப்பில், வெளியாகியுள்ள டான் திரைப்படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம், ரசிகர்களைத் திரையரங்கில் கண்ணீர் விட்டு அழச் செய்யும் அப்பா-மகன் செண்டிமெண்ட் திரைப்படமாக அமைந்துள்ளதைப் பலரும் உணர்வுப்பூர்வமாகப் பாராட்டி வருகின்றனர்.

சமீப காலமாக இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களைத் தொடர்ந்து கேலி செய்து வரும் தமிழ் திரைத்துறையில், இன்ஜினியரிங் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ளார்.

https://twitter.com/drramadoss/status/1537066933912186880

அண்மைச் செய்தி: ‘கொரோனா தொற்று அதிகரிப்பு; முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் – சென்னை விமான நிலையம்’

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன், “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தைச் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிற்கு நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1537073270448877569?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1537073270448877569%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Fcinema-pmk-founder-dr-ramadoss-review-on-sivakarthikeyan-don-movie-abm-758955.html

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.