ட்விட்டர் கணக்கில் அதிக ஃபாலோவர்ஸ் ஐ கொண்ட முதல் 50 பயனர்களின் விவரங்களை ”வேல்ட் ஆஃப் ஸ்டாட்டிக்ஸ்” என்னும் குழு வெளியிட்டுள்ளது.
”வேல்ட் ஆஃப் ஸ்டாட்டிக்ஸ்” என்னும் குழு ட்விட்டரில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட பயனர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,
முதலில் இடத்தில், ட்விட்டர் செயலியின் முதன்மை செயல் அலுவலரான எலன் மஸ்க் உள்ளார். 2ம் இடத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இருக்கிறார். 3ம் இடத்தில் உலக புகழ் பெற்ற பிரபல ஜஸ்டின் ஃபைபர் உள்ளார். 4ம் இடத்தில் கால் பந்து வீரர் கிறிஸ்டினோ ரெனால்டோ உள்ளார்.
இவர்களையடுத்து, 8 வது இடத்தில் இந்திய பிரதமரான நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். ட்விட்டரில் அதிகமாக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் இந்தியர்களில் பிரதமர் மோடி தான் முதலிடத்தில் இருக்கிறார்.
சமீபத்தில், (ஜூலை11) ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால் அவருடைய அக்கவுண்டில் இருந்து 2,70,000 ஃபாலோவர்ஸ் குறைந்துள்ளனர். உலகிலேயே பிரபலங்களின் சாய்ஸ்சாக சமூக வலைதளத்தில் இருப்பது ட்விட்டர் தான். அப்படிப்பட்ட ட்விட்டரில், பிரபலங்களின் பேரில் பல போலி கணக்குகள் செயல்படுகின்றன. ஆகையால், இந்த நிறுவனம் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கும் விதமாக ட்விட்டரில் செயல்படும் போலி அக்கவுண்ட்களை செயல் இழக்க செய்தது. அதனால், இந்தியாவின் பல பிரபலங்களின் ஃபாலோவர்ஸ் குறைந்திருக்கிறது.
இந்தியாவில் இரண்டாவது அதிக ஃபாலோவர்ஸை கொண்ட அமிதாப் பச்சனின் அக்கவுண்டில் இருந்து நான்கு லட்சம் ஃபாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இவர்களை போன்று ராகுல் காந்தி, சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், அமீர் கான் என்று பல பிரபலங்களின் ஃபாலோவர்ஸ் அதிக அளவில் குறைந்திருக்கிறது.
22வது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், 26வது இடத்தில் பிரதமரின் நேரடி ட்விட்டர் கணக்கு இடம் பிடித்துள்ளது. 32வது இடத்தில் அமிதாப் பச்சனும், 38வது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், 39வது இடத்தில் சல்மான் கானும், 42 வது இடத்தில் ஷாருக்கானும் இடம் பிடித்துள்ளனர்.








