#Devara படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தேவரா திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.304 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா…

தேவரா திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.304 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ‘தேவரா’ வெளியாகியுள்ளது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. தேவரா திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகலளவில் ரூ.172 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.304 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் விரைவில் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.