ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீ காந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ENG vs IND | இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் – இந்திய அணி அறிவிப்பு!
நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் உலகளவில் 186 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இத்திரைப்படமானது அதிக கோடிகளை வசூலிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.








