நடிகர் சிவகார்த்திகேயனின் “மாவீரன்” வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிஷ்கின், அதிதி…

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரீலீசானது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம்  வெளியான 11 நாள்களில் உலகளவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு  நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.