முக்கியச் செய்திகள் தமிழகம்

‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நடிகர் நட்ராஜ் ஆதரவு?

இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன் என்று நடிகரும், பிரபல  ஒளிப்பதிவாளருமான நட்ராஜா பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும் ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் “அக்னிபாத்” என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்தத் திட்டத்தால் ராணுவப் பணியில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமாக உள்ள இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து, போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எனினும், மத்திய அரசு இத்திட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெற்று  பணிபுரிபவர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அக்னிபாத் திட்டத்தில் இணைந்து பணிபுரிபவர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதேபோல் நடிகரும், பிரபல ஒளிப்பதிவாளுமான நட்ராஜா அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..” என குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அக்னிபாத் திட்டம் மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கும் அரசுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கடந்த 2 தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உரத் தட்டுப்பாட்டை போக்க தொடர்பு எண்கள் வெளியீடு

Halley Karthik

நீட்தேர்வு- சட்டப்பேரவையில் காரசார விவாதம்

Saravana Kumar

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்!

Saravana