என் மீது பழிசுமர்த்தாதீர்கள் – டெனால்டு டிரம்ப் சாடல்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்பு கடந்த ஆண்டு நடந்த கலவரத்திற்கு தன் மீது பழி சுமத்த வேண்டாம் என் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் சென்ற ஆண்டு நடந்த கலவரத்துக்கு…

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்பு கடந்த ஆண்டு நடந்த கலவரத்திற்கு தன் மீது பழி சுமத்த வேண்டாம் என் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் சென்ற ஆண்டு நடந்த கலவரத்துக்கு முன்னாள் அதிபர் டொனால் டிரம்ப் தான் காரணம் என்று சம்பவத்தை விசாரிக்கும் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தும் முயற்சியின் விளைவாகக் கலவரம் நடைபெற்றதாக விசாரணை குழுத் தலைவர் பென்னி தோம்ப்சன் (Bennie Thompson) கூறினார்.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி வெடித்த கலவரம், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை நிராகரிக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட முயற்சி என்று குழு கண்டுபிடித்தது. டிரம்ப் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வெள்ளை மாளிகை சட்டவிரோதத் திட்டங்களை வகுக்க முயற்சி செய்ததாகவும் குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், விசாரணை குழுவின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், நாட்டின் பெரிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சி தலைமையிலான குழு தன் மீது குற்றம்சாட்டி மக்களை திசை திருப்புவதாக சாடினார்.

அமெரிக்கர்கள் வாஷிங்டன், டிசியில் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக கூறிய டொனால்டு டிரம்ப், கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தேர்தல் முழுவதும் குற்றச் செயல்களின் வெளிப்படையான அறிகுறிகளுக்கு தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டினார்.

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.